Advertisment

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கங்கனா ரணவாத்

kangana

Advertisment

தமிழில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'தாம் தூம்' படத்தில் நடித்தவர் நடிகை கங்கனா ரணவாத். பாலிவுட் நடிகையான இவர் ஹிந்தி பட உலகில் தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன் பலனாக 'தாணு வெட்ஸ் மானு ரிடன்ஸ்' மற்றும் 'குயீன்' படத்திற்காக இரண்டு முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார், அதிலும் தொடர்ந்து இரண்டு வருடமும் இவர் விருது வென்றார். தரமான நடிகையாக இருந்தும் அவ்வப்போது சில சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வார் கங்கனா. இந்நிலையில் இவர் தற்போது ராஜ்குமார் ராவுடன் 'மெண்டல் ஹைக்கியா' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியான நிலையில், அதில் ஸ்விமிங் டப் அருகில் அமர்ந்து கையில் கத்தியுடன், பக்கத்தில் பிரெட் டோஸ்ட் மேக் அப் உபகரணங்கள் வைத்துக்கொண்டு நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

kanganaranaut
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe