/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/55_75.jpg)
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியான பிறகு மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் இப்படத்தை திரையிடத் தடை விதிக்கக் கோரி பலரும் கூறி வந்தனர்.
தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி மல்டிப்ளெக்ஸ் நிறுவனங்கள் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது எனத்தெரிவித்த நிலையில் மல்டிப்ளெக்ஸில் எந்த காட்சியும் திரையிடப்படவில்லை. மேலும் மேற்கு வங்கத்திலும் படத்தை திரையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரும் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான ஜிதேந்திர அவாத், இப்படத்தை கடுமையாகச் சாடியுள்ளார். அவர் கூறுகையில், "தி கேரளா ஸ்டோரி படத்தின் தயாரிப்பாளரை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும். அவர்கள் கேரளாவின் நன்மதிப்பை மட்டும் கெடுக்காமல் அம்மாநில பெண்களையும் அவமதித்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் காணாமல் போய் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவில் சேர்ந்துள்ளதாக காண்பிக்கிறார்கள். ஆனால் உண்மையான எண்ணிக்கை 3 தான்" எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)