Advertisment

பவுன்சர்களால் நயன்தாரா திருமணத்தில் பரபரப்பு 

Conflict between bouncers and reporter nayanthara vigensh shivan wedding

Advertisment

கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகளுக்கு கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள்தொடர்ந்துகேள்வி எழுப்பி வந்த நிலையில் இன்று (9.6.2022) மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில்மிகவும் பிரமாண்டமாக திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இதில் காலை 10.20 மணிக்கு காதலன் விக்னேஷ் சிவனை நயன்தாரா கரம் பிடித்தார்.

திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமணத்திற்கு வருபவர்கள் யாரும் தொலைபேசி எடுத்து வர கூடாது என்றும் அப்படி எடுத்து வந்தால் அதை பயன்படுத்தி எந்த விதமான புகைப்படமும் எடுக்க கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று திருமணத்திற்கு செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்கும் ஏகப்பட்ட கெடுபிடி காட்டப்படுகிறது.

இந்நிலையில் திருமணத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்பவுன்சர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வட இந்திய நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ள இத்திருமணத்தின்பாதுகாப்பு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களும்பவுன்சராக ஈடுபட்டு வருகின்றனர். திருமணத்திற்கு கொடுக்கப்பட்ட நெறிமுறைகள் வேறு மாதிரி இருப்பதாகவும், பவுன்சர் கடைபிடிக்கும் நெறிமுறைகள் வேறு மாதிரி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை செய்தியைசேகரிக்க விடாமல் பவுன்சர்கள் தடுத்து தாக்க முற்பட்டுள்ளனர். மேலும் பிரபலங்களை வெளியில் நின்று புகைப்படம் எடுக்கவும்பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகும்கூறப்படுகிறது. இதனால்அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

ACTRESS NAYANTHARA vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe