/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/A out 2_4.jpg)
நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் காலமானார். அவருக்கு வயது 85. கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் இன்று உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
அஜித் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “நடிகர் அஜித்குமார் அவர்களின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow Us