200 படங்களுக்கு மேல் இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்!

பிரபல மலையாள இசையமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன் மரணமடந்தார். அவருக்கு வயது 87. 1968ஆம் ஆண்டு ‘கறுத்த பவுர்ணமி’ என்ற மலையாளப் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான எம்.கே. அர்ஜுனன் இதுவரை 200 படங்களில் பணியாற்றி 500க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியுள்ளார்.

vdgf

எம்.கே. அர்ஜுனன் கடந்த 2017ஆம் ஆண்டு ‘பயானகம்’ என்ற திரைப்படத்துக்காக கேரள அரசின் மாநில விருதை பெற்றார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக மாற பிள்ளையார் சுழி போட்டவரும் இவரே. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதன்முதலில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்பை வழங்கியது இவர்தான். கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த இவரின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவிலிருந்து வந்து கலந்து கொண்டார். அர்ஜுனன் மாஸ்டன் என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே. அர்ஜுனன் வயது மூப்பு காரணமாக இன்று கொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். எம்.கே. அர்ஜுனன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும்திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ar rahman
இதையும் படியுங்கள்
Subscribe