Advertisment

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய 'சஞ்சு'.... ரன்பீர்கபூர் அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார்.

sanju

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

சஞ்சய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான 'சஞ்சு' திரைப்படம் இந்தியா முழுவதும் கடந்த வெள்ளியன்று வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இதில் சஞ்சய்தத் வேடத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ளார். மற்றும் சஞ்சய்தத் தாய் கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலாவும், அனுஷ்கா சர்மா, சோனம் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் உள்ள சிறைச்சாலையில் கழிவறை நிரம்பி வழிவதுபோன்ற காட்சி இடம்பெற்று இருந்ததற்கு முன்னர் எதிர்ப்புகள் கிளம்பி பின் தணிக்கை அனுமதியோடு படம் வெளியானது. இதையடுத்து தற்போது இந்த படத்தில் சஞ்சய்தத் பல பெண்களுடன் தவறான தொடர்பு வைத்து இருந்ததாகவும், மூத்த நடிகைகள், இளம் நடிகைகள் என்று 350க்கும் மேற்பட்டவர்களை காதலிப்பதாக ஆசைக்கு பயன்படுத்தியதாக காட்சிகள் வைத்துள்ளதாக சமூக ஆர்வலர் கவுரவ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான வசனங்கள் படத்தில் உள்ளன. நடத்தைகளை தவறாக சித்தரித்து உள்ளதாக இருப்பதாக கண்டித்து படத்தில் நடித்துள்ள ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

sanju
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe