/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/956_1.jpg)
கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா -விக்னேஷ்சிவன்ஜோடிக்குகடந்த9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார்விடுதியில்பிரமாண்டமாகத்திருமணம் நடைபெற்றது. இதனையடுத்துதிருமணம் முடிந்த கையேடு இருவரும் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம்செய்யச்சென்றனர். அப்போது நயன்தாரா கோயில் வளாகத்தில் செருப்புகளுடன்சென்றதாகச்சர்ச்சை எழுந்த நிலையில் இதற்குநயன்தாரா -விக்னேஷ்சிவன்தரப்பிலிருந்துமன்னிப்பு கடிதம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்துஇருவரும்நயன்தாராவின்கேரள மாநிலத்தில் உள்ள நயன்தாராவின்வீட்டிற்குச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா மீது மீண்டும் ஒரு புகார் கிளம்பியுள்ளது. கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த நாளில்பொதுமக்கள்கடற்கரைக்குச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கடற்கரை பொதுவான இடம்.அங்குச்செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது மனித உரிமை மீறல் என்று கூறி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)