Advertisment

விக்னேஷ் சிவன் தந்தை மீது போலீசில் புகார்

Advertisment

 Complaint of extortion of property against director Vigneshsivan's father

தமிழில் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல்போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இவர்பிரபல நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு மனைவி நயன்தாராவுடன் வாழ்ந்து வருகிறார்.

Advertisment

இவரின் திருமணத்திற்குஉறவினர்கள் யாரையும் கூப்பிடாமல் பிரபலங்களை மட்டுமே வைத்து நடத்திவிட்டார் என்று இவரின் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்து வந்தனர். இந்த நிலையில் இவரது தந்தை சிவகொழுந்து உறவினர்களின் சொத்தை அபகரித்து விட்டதாக லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் சிவகொழுந்துவின்உடன்பிறந்த சகோதரர் ஒருவருக்கு தர வேண்டிய நிலத்தின் பங்கினைத் தராமல் அபகரித்துக் கொண்டதாகவும், அந்த சொத்திற்கு ஒரு வகையில் பங்குதாரரான விக்னேஷ் சிவனின் தாயார் மீனாகுமாரிமற்றும் அந்த குடும்பத்தின் மருமகள் நயன்தாரா ஆகியோர் மீதும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ACTRESS NAYANTHARA police case vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe