Complaint against Yogi Babu in producer council

Advertisment

‘தாதா’ படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கின்னஸ் கிஷோர், யோகி பாபு தன்னிடம் படம் நடிப்பதாக பணம் வாங்கிவிட்டுநடிக்க வராமலும், பணத்தைத்திருப்பிதராமலும் இருப்பதாகக் கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகத்தெரிவித்துள்ளார்.

alt="ad " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="358c291e-64c1-43da-b275-b4670fb43e3e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_10.jpg" />

யோகிபாபு, நிதின் சத்யா, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாதா’. இப்படத்தை கின்னஸ் கிஷோர் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் பங்கேற்று பேசினர்.

Advertisment

அப்போது கின்னஸ் கிஷோர் பேசுகையில், "இப்படத்தில் யோகிபாபு வெறும் 4 காட்சிகளில் மட்டுமே வருவதாகக் கூறி வருகிறார். அவர் இந்தப் படத்தில் 4 சீனில் மட்டும் நடித்திருந்தால் சினிமாவை விட்டு நான் விலகி விடுகிறேன். 40 சீன்களுக்கு மேல் நடித்திருந்தால் அவர் சினிமாவை விட்டு விலகுவாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "இப்படத்தை யார் வாங்க முன்வந்தாலும் அவர்களுக்கு போன் செய்து வாங்காதீர்கள் என்று சொல்கிறார். இதுபோன்று கெடுதல் செய்து வந்தார். மேலும் எனக்கு இன்னொரு படம் நடித்துக் கொடுப்பதாகச் சொல்லி பணம் வாங்கியிருக்கிறார். அதைத் திருப்பித் தரவில்லை, நடிக்கவும் முன்வரவில்லை. அதனால் எனக்கு படம் நடித்துக் கொடுக்காத வரை வேறு படங்களில் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.

முன்னதாக வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்து அவர் மட்டும் இடம் பெற்றிருக்கும் வகையில் போஸ்டர் இருந்தது. இது தொடர்பாக யோகிபாபு, "இந்த படத்தில் நண்பர் நிதின் சத்யா ஹீரோவாக நடித்துள்ளார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். தயவுசெய்து இதைப் போன்று விளம்பரம் செய்யாதீர்கள்" படக்குழுவை கண்டித்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.