complaint against serial actress reehana begum

பல்வேறு முன்னணி தொலைக்காட்சிகளில் பிரபலமான தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரிஹானா பேகம். இந்த நிலையில் இவர் மீது திருமண போசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இஹ்டு தொடர்பாக ராஜ் கண்ணன் என்பவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகாரில், ‘ரிஹானா பேகம் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றதாக கூறி என்னுடன் நட்பாக பழகி வந்தார். பின்பு அவரை திருமணம் செய்து கொண்டேன். ரூ.18.5 லட்சம் செலவு இதுவரை அவருக்கு செய்துள்ளேன்.

Advertisment

ஒரு நாள் ரிஹானா வீட்டிற்கு சென்ற போது அவர் முதல் கணவருடன் விவாகரத்து பெறவில்லை என தெரிய வந்தது. ஆனால் என்னிடம் விவாரத்து பெற்று விட்டதாக பொய் சொல்லி தன்னிடம் திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதனால் அவர் மீதும் அவரது தாயார் மற்றும் முதல் கணவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திருப்பி தர வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இந்த புகாரைப் பெற்று கொண்ட காவல் துறையினர் ரிஹானா பேகம் குடும்பத்தினரை இன்று மாலை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.