விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா கடந்த மாதம் 24ஆம் தேதி நடந்த நிலையில் அதில் நடிகர் சத்​ய​ராஜுக்கு ‘பெரி​யார் ஒளி’ விருது வழங்கப்பட்டது. மேடையில் பேசிய அம்பேத்கர், பெரியார், முருகர் மாநாடு, கடவுள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருந்தார். 

இந்த நிலையில் சத்யராஜ், இந்து மக்களின் மனம் புண்படும்படி பேசியதாக கூறி பாரத் இந்து முன்னணி என்ற அமைப்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரில், “விசிக நடத்திய விருது வழங்கும் விழாவில் மேடையில் பேசிய சத்யராஜ், தமிழினத் தலைவர் பிரபாகரனுடைய புகைப்படத்தை திறக்கும் வாய்ப்பை தம்பி தான் எனக்கு கொடுத்தார் அதுவும் விசிக அலுவலகத்தில் எனக்கு என்ன என்றால் தம்பி ஒருவர் இங்கு கடவுளைப் பற்றி பேசுங்கள் என்று சொன்னார். அழகான ஒரு பன்ச் டயலாக் பெரியார் சொன்னதுதான். பெரியாரிடம் போய் கேட்டாங்க ஆத்திகத்துக்கும் நாத்திகத்திற்கும் என்ன வித்தியாசம் என்று.

பெரியார் பதில் சொன்னார் இப்போ கோவிலில் கடவுள் சிலை முன்பு ஒரு உண்டியல் வைக்கிறீங்களே அது ஆத்திகம், அந்தக் கடவுளே நம்பாம உண்டியலை பூட்டு போடுறீங்க இல்ல அதுதான் நாத்திகம், மேட்டர் ஓவர் சேப்டர் ஓவர். தந்தை பெரியார் மாதிரி போட்டு வாங்குற ஆளு யாருமே இருக்க முடியாதுங்க. போற வழியில கார் ரிப்பேர் ஆயிடுச்சு அங்க இருந்த ஒருவர் வந்து ஐயா நீங்க பெண் விடுதலைக்காக சமூக நீதிக்காக ஜாதி ஒழிப்புக்காக எல்லாம் போராடுறீங்க ஆனா நாங்க நம்புகின்ற கடவுளை போய் நீங்க கல்லு என்று சொல்கிறீர்களே அதுதான் ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு  

444

Advertisment

அப்படியா தம்பி சரி இப்ப நீங்க எங்க போயிட்டு இருக்கீங்க ஐயா நான் கோவிலுக்கு தான் போயிட்டு இருக்கேன், சரி நானும் கூட வரேன் வாங்க, கோவிலுக்குள்ள போன உடன் பிரசாதம் எல்லாம் வாங்கிட்டு மணியெல்லாம் அடிச்சிட்டு இருக்காங்க அங்க இருந்து பூசாரியிடம் உள்ள இருக்க சிலை அது வெண்கலமா இல்ல பித்தளையான்னு கேட்கிறார், அட அது கல்லுங்க பாருங்க, அவரே கல் என்று சொல்லிட்டாரு நீங்க என்ன போய் திட்டுறீங்களே... ஐயாவை பொறுத்தவரை சாதி ஒழிய வேண்டும், அதற்காக தடையாக இருக்கின்ற கடவுள் என்கின்ற கற்பனை கருத்தியலை மறுக்கிறார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.