/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/poonam-pandey_0_2.jpg)
பல வருடங்களாக சர்ச்சைகளை ஏற்படுத்தியே பிரபலமானவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்படி சுய விளம்பரத்திற்காக எதையாவது பரபரப்பாக செய்து ட்ரெண்ட் ஆகும் பூனம் பாண்டே, ஊரடங்கு காலத்தில்தனது காதலருடன் காரில் பயணம் மேற்கொண்டு சிக்கினார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
பூனம் பாண்டேவுக்கும் அவரது காதலர் சாம் பாம்பேவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம், பூனம் பாண்டே - சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ஆபாச காட்சிகள் படமாக்கியதாக கோவாவிலுள்ள கனகோனா காவல் நிலையத்தில் பூனம் பாண்டே மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சப்போலி அணையில் ஆபாச காட்சியை படம் எடுத்திருப்பதாக கோவா ஃபார்வர்ட் கட்சியின் மகளிரணி தலைவர் புகார் அளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)