சின்னதிரையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் நகைச்சுவை செய்து பிரபலமானவர் கேபிஒய் பாலா. பின்பு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து பலரது பாராட்டை பெற்றார். இப்போது அவர் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகாகியுள்ள படம் ‘காந்தி கண்ணாடி’. ஷெரிஃப் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தை ஜெய் கிரண் என்பவர் தயாரித்துள்ளார். 

Advertisment

இப்படத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்க விவேக் - மெர்வின் இருவரும் இசையமைத்துள்ளனர். கடந்த 5ஆம் தேதி வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. திடீர் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்படும் பாலா மற்றும் அவர் உதவியை நாடும் பாலாஜி சக்திவேல், பின்பு அதில் இருந்து எப்படி மீண்டார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. 

Advertisment

இந்த நிலையில் இப்படத்தில் பிரதமர் மோடி குறித்து இழிவுபடுத்தும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாக சிவசேனா கட்சியினர் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் படத்தின் இயக்குநர் ஷெரிஃப், பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.