Advertisment

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நடிக்கும் அரிசி பட அப்டேட்

communist party leader mutharasan movie arisi update

எஸ்.ஏ. விஜயகுமார் இயக்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் இரா. முத்தரசன்முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் அரிசி. முதல் முறையாக அவர் நடிக்கிறார். இதில் சமுத்திரக்கனி, சுப்பிரமணியம் சிவா, சிசர் மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மோனிகா புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையாராஜா இசையமைக்கிறார். இப்படம் அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலை மையப்படுத்தி உருவாகிறது. இதில் விவசாயி கதாபாத்திரத்தில் முத்தரசன்நடிக்கிறார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர், கும்பகோணம், குடவாசல், திருவையாறு ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்து படப்பிடிப்பும் முடிந்துள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து போஸ்ட் புரடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீடு பற்றிய அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment
samuthirakani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe