Advertisment

காமன்வெல்த் 2022 - நிறைவு விழாவில் யுவன் பாடல்

Commonwealth 2022 - Yuvan shankar raja Song at Closing Ceremony

2022ஆம் ஆண்டின் காமன்வெல்த் போட்டிகள் கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் தொடங்கி நடைபெற்று வந்தது. இப்போட்டியில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடம் பிடித்தது. முதல் இடத்தில் 178 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது இடத்தில் 176 பதக்கங்களுடன் இங்கிலாந்தும் மூன்றாவது இடத்தில் 92 பதக்கங்களுடன் கனடாவும் இருக்கிறது.

Advertisment

இந்நிலையில் இப்போட்டி நேற்றுடன் நிறைவுபெற்றது. நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறியது. அப்போது கலை நிகழ்ச்சியில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான 'அவன் இவன்' படத்தில் இடம்பெற்ற 'டியா டியா டோலே' பாடலுக்கு அசத்தலாக மூன்று பெண்கள் நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment

commonwealth games yuvan shankar raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe