பிரபல நடிகரின் ஹோட்டலில் ரெய்டு

commercial tax department raid actor soori restaurant

தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வரும் சூரி தனது சொந்த ஊரான மதுரையில் 'அம்மன்' என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த உணவகம் மதுரையில் உள்ள தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல இடங்களில் 'அம்மன்' என்ற பெயரில் இயங்கி வருகிறது.

commercial tax department raid actor soori restaurant

இந்நிலையில் சூரியின் சொந்தமான உணவகங்களில் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் வணிகவரித்துறை சோதனை நடத்தியுள்ளனர். உணவகத்துக்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லாதது பற்றியும் விசாரணை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புகார் தொடர்பாக நடிகர் சூரிக்கு 15 நாளில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு வணிகவரித்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

actor soori madurai
இதையும் படியுங்கள்
Subscribe