பூங்காவில் முற்றிய வாக்குவாதம்; நகைச்சுவை நடிகர் ஜெயமணி கைது

comedy actor jeyamani arrested

தமிழ் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் ஜெயமணி. நகைச்சுவை நடிகர் செந்தில் போல் தோற்றமுள்ளவராக இருப்பார். சென்னையில் வசித்து வரும் இவர், தனது நண்பருடன் பூங்காவிற்கு சென்றுள்ளார். அதே பூங்காவில் நீதிபதி திருமால் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ள நிலையில் ஜெயமணி மற்றும் அவரது நண்பரும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாக்குவாதம் முற்றி நீதிபதியை ஜெயமணி தாக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி சார்பில் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் ஜெயமணி மேல் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து. ஜெயமணியையும், அவர் நண்பரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

arrested COMEDY ACTOR
இதையும் படியுங்கள்
Subscribe