/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/54_17.jpg)
இயக்குனர் சேரன் இயக்கத்தில், நடிகர் முரளி, பார்த்திபன் நடிப்பில் வெளியான படம் வெற்றிக்கொடி கட்டு. அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகியவர் பெஞ்சமின். அதனைத் தொடர்ந்து, திருப்பாச்சி, பகவதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது சேலத்தில் வசித்து வரும் இவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்மாரடைப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, சேலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 3 நாட்கள் சிகிச்சை எடுத்தார். அங்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான போதிய வசதி இல்லாததால், மேற்சிகிச்சைக்காக பெங்களூரு சென்றுள்ளார். இந்நிலையில், தனது சிகிச்சைக்கு பண உதவி கோரி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், மாரடைப்பு காரணமாக சேலத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாகவும், தற்போது அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதற்கு எவ்வளவு செலவு ஆகுமெனத் தெரியவில்லை எனக் கூறிய அவர், மருத்துவ உதவி செய்யக்கூடிய நண்பர்கள் யாரவது உதவி செய்யுமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
இதனையடுத்து, நடிகர் பெஞ்சமின் உருக்கமாகப் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)