Advertisment

பிரபல நகைச்சுவை நடிகருக்கு திருமணம்!

aswin

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா மற்றும் சந்தானம் உள்ளிட்டோர் நடித்து செம ஹிட்டான படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்த படத்தில் வட்டிக்கு பணம் தரும் ஃபைனான்சியராக வரும் மொட்ட ராஜேந்திரரின் மகனான அஸ்வின் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தை தொடர்ந்து அவர் மிகவும் பிரபலமானார். பல படங்களில் காமெடி நடிகராக வலம் வந்தார்.

Advertisment

நடிகர் அஸ்வின் தனக்கு 24ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அதன்படி, இன்று (ஜூன் 24) காலை சென்னையில் அஸ்வின் - வித்யாஸ்ரீ இருவரின் திருமணம் நடந்தது. இதில் திரையுலக நண்பர்கள் யாருமின்றி அஸ்வின் - வித்யாஸ்ரீ இருவரது குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

Advertisment

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தனது காதலியை கரம் பிடித்துள்ளார் நடிகர் அஸ்வின். தமிழ்த் திரையுல பிரபலங்கள் பலரும் அஸ்வின் - வித்யாஸ்ரீ தம்பதியினருக்கு தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

kollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe