Advertisment

குளியளறையில் வழுக்கி விழுந்து நகைச்சுவை நடிகர் பலி...

ஆறு உள்ளிட்ட பல படங்களில் வடிவேலுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்த நகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன் காலமானார்.

Advertisment

jeyachandran

உடுமலைப்பேட்டையில் பிறந்து, சினிமா ஆசையால் சென்னைக்கு வந்தவர் நகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன். இவருக்கு வயது 66. இவர் 100க்கும் மேலான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். அதில் குறிப்பாக ஆறு படத்தில் வரும் ஒரு காமெடி இவர் நடித்ததில் மிகவும் பிரபலமானது.

66 வயதாகும் ஜெயச்சந்திரன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு படப்பிடிப்புக்குச் சென்று வீடு திரும்பிய ஜெயச்சந்திரன் மறுநாள் காலை பாத்ரூமுக்குச் சென்ற போது வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டிருக்கிறது.

Advertisment

உடனே அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்த ஜெயச்சந்திரனுக்கு லக்‌ஷ்மி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இவருடைய மரணம் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. நடிகர் சங்கம் பொறுப்பில் இருந்த நடிகர் விஷால், பொன்வண்ணன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஏ.வி.எம் சுடுகாட்டில் இன்று ஜெயச்சந்திரனின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

actor Vadivelu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe