Advertisment

'கோமாளி' பட இயக்குநரின் அடுத்த படத்திற்கு விஜய் பட டைட்டில்

comali movie director pradeep ranganathan next movie titled as 'love today'

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'கோமாளி'. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். சமூக கருத்துக்களை கொஞ்சம் காமெடி கலந்து பொழுது போக்கு படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 'ஏஜிஎஸ் ப்ரொடக்ஷன்' தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கி அதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'லவ் டுடே' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். 'லவ் டுடே' என்ற தலைப்பில் ஏற்கனவே விஜய் நடிப்பில் 1997-ஆம் ஆண்டு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ags cinemas Pradeep Ranganathan yuvan shankar raja
இதையும் படியுங்கள்
Subscribe