Colors Tamil New 2 Serials

திங்கள் முதல் வெள்ளி வரை பேரழகி 2 தொடர் இரவு 8.30 மணிக்கும், அர்ச்சனை பூக்கள் தொடர் இரவு 9 மணிக்கும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது

Advertisment

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பொழுதுபோக்கு சேனல் 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் ரசிகர்ளை மகிழ்விக்கும் விதமாக தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த தொடர்களைக் கொண்டு வருகிறது. இதன் மூலம் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஊக்குவித்தல், கொண்டாட வைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஸ்டீரியோடைப் நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல், முற்போக்கு எண்ணம் கொண்ட நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தல், சமகால நிகழ்ச்சிகளை நடத்துவதில் கலர்ஸ் தமிழ் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் இரண்டு சீரியல்களை அறிமுகப்படுத்துகிறது

Advertisment

விதியின் திருப்பங்களால் ஒன்றிணைக்கப்படும் போது வேறுபட்ட எண்ணங்கள் உடைய பெண்களிடையே எவ்வளவு ஆழமான மற்றும் தனித்துவமான பிணைப்புகள் உருவாகின்றன என்பதை எடுத்துக்காட்டும் விதமாக பேரழகி 2, மற்றும் அர்ச்சனைப் பூக்கள் என்ற இரு சகோதரிகளின் கதை ஆகிய இரண்டு தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளன. இந்த இரண்டும் கன்னடத்தில் ஹிட்டான லக்சனா மற்றும் பாக்யலஷ்மி ஆகிய தொடர்களின் டப்பிங் வெர்ஷனாகும். இந்த 2 தொடர்புகளும் ஜூலை 3-ம் தேதி முதல் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகவுள்ளன.