Advertisment

கலர் ஃபுல்லான போஸ்டருடன் அடுத்த பட டைட்டிலை அறிவித்த சுந்தர்.சி

Colorful poster; Sunder.C announced the title of the next film

Advertisment

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தற்போது 'வல்லான்', 'தலைநகரம் 2' மற்றும் 'ஒன் 2 ஒன்' படத்தை பிசியாக நடித்து வருகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக 'அரண்மனை 3' படம் வெளியானது. ஹாரர் காமெடி ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனை அடுத்து ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் இவர்களோடு மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்து நடைபெற்று வந்தது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு 'காஃபி வித் காதல்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், ஜீவா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள். மேலும் இப்படம் மகிழ்ச்சியான, இனிமையான மற்றும் உற்சாகமான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என தெரிவித்து கலர் ஃபுல்லாக ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள்.

Coffee With Kaadhal movie jai jiiva sundar c
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe