Advertisment

"கூடுதல் டிக்கெட் இருக்கு" - கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதிய விக்ரம் ரசிகர்

college student who wrote a letter to the college principal for vikram cobra release

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' படம் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை (31.08.2022) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் கூட இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் திருச்சியில் ஒரு தனியார் கல்லூரி மாணவர் அக்கல்லூரியின் முதல்வருக்கு 'கோப்ரா' படம் பார்ப்பதற்காக விடுமுறை வேண்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "(31.08.2022) தேதி திரையரங்கில் டிக்கெட் கிடைக்காததால் அடுத்த நாளான (01.09.2022) அன்று எங்களுக்கு விடுமுறை வேண்டும். எங்களிடம் கூடுதலாக ஒரு டிக்கெட் உள்ளது. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் நீங்களும் கலந்துகொள்ளலாம்" என குறிப்பிட்டுள்ளது. இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment

actor vikram cobra movie college student
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe