கோவையில் நடிகர் யோகிபாபு கலந்து கொண்ட படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான சமபவத்தை அந்தப் படக்குழுவினர் சமீபத்தில் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். கதிரவன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'அவளுக்கென்ன அழகிய முகம்' திரைப்படத்தில் பூவரசு, அனு, பவர் ஸ்டார் சீனிவாசன், யோகிபாபு உள்பட பலரும் நடித்துள்ளனர். கேசவன் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற செப்டெம்பர் 7 அன்று திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் அருகே தெலுங்குபாளையத்தில் நடந்ததாம்.

Advertisment

yogi babu

கதைப்படி, ஒரு காட்சியில் பேருந்தில் செல்லும் யோகிபாபு, அங்கு சேட்டை செய்து மக்களிடம் அடிவாங்குகிறார். அந்தக் காட்சியைப் படமாக்கும்பொழுது, ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் ஒருவர் அடிவாங்குவதைப் பார்த்த ஊர்மக்கள் சிலர், ஏதோ பிரச்சனை என்று எண்ணி நான்கைந்து இருசக்கர வாகனங்களில் கிளம்பி பஸ்ஸை பின்தொடர்ந்தனர். பஸ்ஸை நிறுத்துமாறு கத்திக்கொண்டே பின்னே வந்த அவர்கள் ஒரு கட்டத்தில் பஸ்ஸை முந்திச் சென்று நிறுத்தியுள்ளனர். உள்ளே ஏறி 'என்ன பிரச்சனை? ஏன் அடிக்கிறீங்க?' என்று கேட்ட அவர்கள் யோகிபாபுவைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கேமராவுடன் அங்குள்ளவர்கள் விளக்கவும் அவர்கள் சிரித்துக்கொண்டே கிளம்பிச் சென்றனர். இந்த சம்பவத்தைப் பார்த்த போலீஸ்காரர்களும் வந்து, படப்பிடிப்பு பொறுப்பாளரிடம், 'இது போன்ற காட்சிகளை ஊருக்கு வெளியே வைத்து எடுங்கள். அனுமதி இருக்கிறது என்பதற்காக அலட்சியமாக இருக்காதீங்க' என்று கூறிவிட்டு சென்றனராம்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">