coffee with kadhal ott release date released

Advertisment

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் 'காஃபி வித் காதல்' படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார். இப்படத்தில் மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். அவ்னி சினிமா மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மாதம் 4ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் 'காஃபி வித் காதல்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 9ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஜீ5 நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.