style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
'அறம்' படத்திற்கு நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அடுத்து வெளியாகவுள்ள படம் 'கோலமாவு கோகிலா'. நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, விஜய் டிவி ஜேக்குலின், நவீன் குமார், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கமலின் 'விஸ்வரூபம் 2' படமும் இதே தேதியில் வெளியாகிவுள்ளதால் இருபெரும் நட்சத்திரங்களுக்குள்ளும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென்று 'கோலமாவு கோகிலா' படம் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதனால் கமலின் விஸ்வருபம் 2 படத்துடனான போட்டியில் இருந்து 'கோலமாவு கோகிலா' படம் விளக்கியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">