யோகிபாபு தற்போது தவிர்க்கமுடியாத ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் உருமாறியுள்ளார். இந்நிலையில் அவர் ஹீரோவாக நடித்திருக்கும் காக்டெயில் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இவர் ஹீரோவாக நடித்த தர்மபிரபு, கூர்க்கா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஐம்பொன் சிலை கடத்தலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருப்பது நேற்று வெளியான டீஸரின் மூலமே தெரிகிறது. ரேஷ்மி கோபிநாத், மைம் கோபி, விஜய் டிவி காமெடி பிரபலங்கான ஷாயாஜி ஷின்டே, வெட்டுக்கிளி பாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பி.ஜி.முத்தையா தயாரிக்க, இரா.விஜய்முருகன் இயக்கியுள்ளார்.
முன்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் யோகிபாபுவை முருகன் சிலை போல சித்தரித்து வெளியிட்டிருந்தனர். இது இந்து அமைப்பினர்களிடையே சலசலப்பையும், சர்ச்சையையும் கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.