'கடாரம் கொண்டான்' படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் 'கோப்ரா'. இது விக்ரமின் 58-வது படமாகும். 'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார்.

cobra vikram

Advertisment

7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் 18 வியாகாம் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இந்தப் படத்தைத் தயாரிக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கே.ஜி.எஃப் படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விக்ரமின் பிறந்தநாளானா இன்று, அதைக் கொண்டாடும் வகையில் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ ஷங்கர், இயக்குனர் அஜய் ஞானமுத்து, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் உள்ளிட்ட கோப்ரா பட டீம் வாழத்துகள் தெரிவித்தனர்.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/2fd0PmEkhzE.jpg?itok=UeOcPADl","video_url":" Video (Responsive, autoplaying)."]}