
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் நடிகர் விக்ரம் 7 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நடிகர் விக்ரமின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது.இதற்கிடையே ரஷ்யாவில் நடைபெற்று வந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ‘கோப்ரா’ படம் வரும் மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக முன்னர் கூறப்பட்டது. இதையடுத்து, ரம்ஜான் பண்டிகைக்குள் படத்தின் பின்னணி வேலைகள் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், ‘கோப்ரா’ படத்தை வரும் ஜூலை மாதம் வெளியிட உள்ளதாக புதிய தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், ‘கோப்ரா’ படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ஒரு பொய்யான தகவல், இதில் உண்மை இல்லை என்று இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சமூகவலைதளத்தில் விளக்கமளித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)