Skip to main content

விக்ரமின் 'கோப்ரா' படம்...  அப்டேட் விட்ட படக்குழு!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

cobra

'கடாரம் கொண்டான்' படத்தைத் தொடர்ந்து நடிகர்ம் விக்ரம் நடித்து வந்த படம் 'கோப்ரா'. 'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துதான் இப்படத்தை இயக்கி வருகிறார். 'ஐ' படத்திற்கு அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
 


விக்ரம் பிறந்தநாளின்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது படக்குழு. அதன் அடிப்படையில் விக்ரமின் நடிப்பிற்கும், உழைப்பிற்கும் தீனி போடும் வகையில் பல வேடங்களை ஏற்று நடித்திருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதி ஷூட்டிங்குடன் நாடு திரும்பியது படக்குழு.
 


இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன்ஸ், இதுவரை 90 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது இன்னும் 25 சதவீதம் ஷூட்டிங் நடைபெற வேண்டும் என்று அறிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு மீதமுள்ள ஷூட்டிங்கை உடனடியாக எடுத்து இறுதிக்கட்ட பணிகளை முடித்து ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பயமா.. எனக்கா.. நாகத்திடம் மாஸ் காட்டிய சிங்கப் பெண்; வைரலாகும் வீடியோ

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

woman caught indian cobra

 

பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனச் சொல்வார்கள். ஆனால், அது பொய் என்பது போல 6 அடி நீளமுள்ள இந்தியன் கோப்ராவை கையில் வைத்து விளையாடியப் பெண்ணின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரம் அருகே எல்.ஐ.சி. நிறுவனத்தின் துணைக் கிளை அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த எல்.ஐ.சி. அலுவலகத்தில் கடந்த 4 ஆம் தேதி காலை 10 மணியளவில் ஒரு பெரிய நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. திடீரென டேபிள் அடியில் பாம்பு இருப்பதைப் பார்த்த ஊழியர்கள் அங்கிருந்து பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

 

இந்நிலையில், அலுவலகத்துக்குள் சென்ற பாம்பை பிடிப்பதற்காக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு, தீயணைப்புத்துறையை சேர்ந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து அலுவலகத்துக்குள் பட்டறை போட்டிருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார்.

 

பொதுவாக, பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனக் கூறுவார்கள். ஏனென்றால், அது மிகவும் கொடிய விஷ ஜந்துக்களில் ஒன்றாக உள்ளது. அதில், இந்தியாவில் இருக்கும் நாகப்பாம்பை தான் 'இந்தியன் கோப்ரா' என அழைப்பர். இந்த வகை பாம்பை தான் அந்த இளம்பெண் கையில் வைத்திருந்தார். 6 அடி நீளமுள்ள இந்த நாகப்பாம்பு அதன் பின்புறத்தில் மூக்கு கண்ணாடி தோற்றம் இருந்தது.

 

அந்தப் பெண்ணின் கையில் இருக்கும் பாம்பு சீறும்போது அங்கிருக்கும் ஊழியர்கள் பயத்தில் பின்வாங்கி நின்றனர். இந்நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

 

Next Story

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘கோப்ரா’... விக்ரமிற்காக காத்திருக்கும் படக்குழு!

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

Cobra movie final shoot update out now

 

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான 'கோப்ரா' படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

 

சென்னை, ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் 80 சதவீத காட்சிகளைப் படமாக்கிய படக்குழு, ‘கோப்ரா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் ரஷ்யா செல்லவுள்ளது. அங்கு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளைப் படமாக்க திட்டமிட்டுள்ள படக்குழு, தற்போது நடிகர் விக்ரமின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர்.

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'மகான்', மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய இரு படங்களில் நடிகர் விக்ரம் பிசியாக நடித்துவருவதால் ‘கோப்ரா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை என கூறப்படுகிறது. இந்த இரு படங்களின் பணிகளை முடித்துவிட்டு இந்த மாத இறுதியில் விக்ரமுடன் ‘கோப்ரா’ படக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.