இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் நடிகர் விக்ரம் 7 கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சவன் ஸ்கிரீன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நடிகர் விக்ரமின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (06.01.2021) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘கோப்ரா’ படத்தின் டீசர் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்தகவலை அறிந்த நடிகர் விக்ரமின் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.