கடாரம் கொண்டான் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் கோப்ரா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெற்று வந்தது. தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஷூட்டிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதி ஷூட்டிங்கிலேயே ரஷ்யாவிலிருந்து விடைபெறுகிறது கோப்ரா படக்குழு. இதை அப்படத்தின் இயக்குனர் ட்விட்டரில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.