Skip to main content

’கோப்ரா’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

Published on 20/05/2022 | Edited on 20/05/2022

 

COBRA MOVIE RELEASE ON AUGUST11

 

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துள்ள படக்குழு தற்போது இறுதிக் கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக நடைபெற்று வந்த இப்படத்தின் பணிகள் நிறைவடைந்து  ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம் படத்தில் எஸ்.ஜே சூர்யா

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
sj suryah in in vikram chiyaan 62

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் அதுவும் தற்போது தள்ளி போகவுள்ளதாக கூறப்படுகிறது.  இதனிடையே விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் நீண்ட இழுபறிக்கு பின் இம்மாதம் வெளியாகும் என கெளதம் மேனன் தெரிவித்திருந்தார். அதன் பிறகு எந்த அப்டேட்டும் படக்குழு வெளியிடவில்லை. 

இதனை தொடர்ந்து தனது 62வது படத்திற்காக சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் தற்போது புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. எஸ்.ஜே சூர்யா தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர், ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story

சிறப்புத் தோற்றம் - இரண்டாவது முறையாக இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
vijay sethupathi play cameo in ajay gnanamuthu new movie

தமிழைத் தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, மௌனப் படமான 'காந்தி டாக்கீஸ்', தமிழில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை பாகம் 2', மிஷ்கின் இயக்கும் டிரெயின், மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா, ஆறுமுக குமார் இயக்கும் புதிய படம் என ஏராளமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவ்வப்போது சிறப்புத் தோற்றத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவாவதாகச் சொல்லப்படும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் திரை வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். 

விஜய் சேதுபதி, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் ஏற்கனவே சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.