ajay

'டிமான்ட்டி காலனி' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது விக்ரமை வைத்து 'கோப்ரா' என்றொரு படத்தை இயக்கி வருகிறார்.

Advertisment

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கியக்கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் ஷூட்டிங் கடைசியாக ரஷ்யாவில் நடைபெற்று வந்தது. அந்தச் சமயத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுவிட்டது.

Advertisment

கரோனா அச்சுறுத்தல் தொடங்கி 100 நாட்கள் கடந்துவிட்டதால் எந்தவொரு பணியுமே நடைபெறவில்லை. இதனால் தயாரிப்பாளர்களுக்குக் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பல பிரபலங்கள் தங்களுக்குக் குறைந்த சதவீத சம்பளமே போதும் என்று அறிக்கை கூட வெளியிட்டனர்.

இந்நிலையில் 'கோப்ரா' படத்தின் இயக்குனர் அஜய், தனது சம்பளத்திலிருந்து 40 சதவிதத்தைக் குறைத்துகொள்வதாக அறிவித்துள்ளார்.

Advertisment