Advertisment

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் மிரட்டும் ஆதீரா... கவனம் ஈர்க்கும் விக்ரம் பாடல்

Cobra Adheeraa song release now

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான 'கோப்ரா' படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துள்ள படக்குழு தற்போது இறுதிக் கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

ஏற்கனவே வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படக்குழு இப்படத்தின் இரண்டாவது பாடலானஆதிரா ஆதிரா.. என்ற பாடலை வெளியிட்டுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பா. விஜய் வரிகளில் வாகு மஸான்பாடியுள்ள இப்பாடல் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

Advertisment

actor vikram ar rahman cobra movie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe