CM's participation vijay Beast audio Launch

Advertisment

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, ஏப்ரல் மாதம் 'பீஸ்ட்' படம் வெளியாகும் என அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான அரபிக்குது பாடல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20 அல்லது 23 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாககூறப்படுகிறது. பொதுவாக விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலே தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். காரணம் என்னவென்றால் விழாவில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கான குட்டி ஸ்டோரியுடன் அரசியலையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போவார். அடுத்தநாள்அவரின் பேச்சுக்கள் பெரும் விவாதத்தை உண்டாக்கும்.

இந்நிலையில் 'பீஸ்ட்' படத்தின் இசை வெளியீட்டுவிழாவிற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இவ்விழாவிற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சமூக வலைத்தளங்களில் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாதுஎன செய்திகள் வெளியாகி வருகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.