Skip to main content

"உமது திரைமொழி தமிழ்மொழியைப் பல்லாண்டு வளர்க்கட்டும்" - வைரமுத்துவுக்கு முதல்வர் வாழ்த்து

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

cm wishes vairamuthu

 

திரைத்துறையில் 40 வருட இடைவெளிக்குள் கிட்டத்தட்ட 7500 பாடல்கள் மற்றும் கவிதைகளை எழுதி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் கவிஞர் வைரமுத்து. இந்தியாவில் ஏழு தேசிய விருதுகளை வாங்கிய ஒரே பாடலாசிரியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்நிலையில் வைரமுத்து இன்று(13.07.2022) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே. உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்