Skip to main content

"குறுகிய காலத்தில் உலகளாவிய நிகழ்வு" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

CM Stalin's praise vignesh shivan and ar rahman

 

சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நேற்று (09.08.2022) கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. கலைநிகழ்ச்சிகளை பார்த்த மக்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

 

ad

 

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக பலருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில் ஒரு பகுதியாக, " இசைப் புயல் ஏ.ஆர் ரஹ்மான், உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குநர் விக்னேஷ் சிவன், தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் குறுகிய காலத்தில் இந்த உலகளாவிய நிகழ்வுக்கு தங்கள் கடின உழைப்பு, ஆதரவு, ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

முதல்வரின் பதிவை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மான், "நிச்சயமாக இந்த வெற்றி தமிழ்நாட்டிற்கு வெளிப்படும் ஒரு பெரிய விஷயங்களுக்கான ஒரு ஆரம்பம் தான்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் விக்னேஷ் சிவன், "இது ஒரு பெருமையான தருணம், பிரபஞ்சத்திற்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்