ADVERTISEMENT

“பார்த்திபன் ஒரு டெக்னாலஜி சீனியர்” - முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

11:58 AM Aug 02, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இரவின் நிழல் படத்தை பார்த்த மு.க ஸ்டாலின் பார்த்திபனை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன் ஒத்த செருப்புக்குப் பிறகு ஒத்த ஷாட் படம், இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம். நான் லீனியர் சிங்கிள் ஷாட் படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள பார்த்திபன், நான் லீனியரில், நான் சீனியர் எனத் தமிழகமே பாராட்டிவிட்டது.முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி.பாராட்டப்படும் போது பட்ட கடனும் படும் கஷ்டமும் தற்காலிகமாக தற்கொலை செய்து கொள்கின்றன.இனி பார்… பார்க்க …. பாராட்டும்" ட்வீட் செய்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT