Advertisment

சத்யராஜ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர்

Advertisment

cm stalin meets sathyaraj

சத்யராஜின் தாயாரான நாதாம்பாள் (94) கடந்த மாதம் 11 ஆம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து சத்யராஜின் குடும்பத்தாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் தொலைப்பேசி வாயிலாகவும் சமூக வலைத்தளங்களிலும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.9.2023) சத்யராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே. சேகர்பாபு இருந்தனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சத்யராஜ் 40 வருடத்துக்கும் மேலாகத்திரைத்துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போதும் ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

cm stalin sathyaraj
இதையும் படியுங்கள்
Subscribe