cm stalin about vijay political party

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதனிடையே தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். மேலும் கடையாக தான் ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டு முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் விஜய்யின் அரசியல் வருகை குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருந்த ஸ்டாலின் இன்று சென்னை வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கியது தொடர்பான கேள்விக்கு, “மக்களுக்கு தொண்டாற்ற யார்வந்தாலும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.