cm mk stalin wishes ar rahman

திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடி வருகிறார். அவருக்குத்திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கம் வாயிலாக ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான், இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம், ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்தியேன் நடித்துள்ள 'அயலான்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் கமலின் தக் லைஃப், ஜெயம் ரவியின் ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பல்வேறு படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.