Advertisment

ஏ.வி.எம் சரவணனை நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

cm mk stalin meets producer avm saravanan

தென்னிந்திய மொழிகளில் அனுபவம் வாய்ந்த புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது ஏ.வி.எம் ப்ரொடக்ஷன்ஸ். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 300 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளது. நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்ளிட்டோரைஅறிமுகப்படுத்தியது.

Advertisment

1945 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை தற்போது ஏ.வி.எம் சரவணன் கவனித்து வருகிறார். இவர் தயாரித்த ரஜினியின் 'எஜமான்', 'சிவாஜி', சூர்யாவின் 'பேரழகன்', 'அயன்', விக்ரமின் 'ஜெமினி' உள்பட பல படங்கள் கிட்டத்தட்ட 100 நாட்களைத்தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

Advertisment

ஏ.வி.எம் சரவணனுக்கு கையில் அடிபட்டு தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏ.வி.எம் சரவணனை அவரது வீட்டில் நேரில் சந்தித்து அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

cm stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe