Advertisment

ட்ரெண்டிங்கில் நடிகர் ஆதியின் 'கிளாப்' பட டீசர்!

hrehrd

Advertisment

பிக் ப்ரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐ.பி கார்த்திகேயன் தயாரிப்பில், ஆதி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “கிளாப்” படத்தின் டீசர் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆதி உடைய திறமையான நடிப்பும், பிரித்வி ஆதித்யா உடைய திறமையான எழுத்தினாலும் உருவான கிளாப் படத்தின் 70 நொடிகள் அடங்கிய டீசர் ரசிகர்களிடம் மிகுந்த பாராட்டைப் பெற்றிருக்கிறது. மேலும் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாரான அமிதாப்பச்சன் படத்தின் டீஸரை பாராட்டியுள்ளார். இதுகுறித்து பிக் ப்ரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐ.பி கார்த்திகேயன் பேசியபோது...

"நடிகர் அமிதாப்ஜிக்கு பெரும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவின் பெரிய நட்சத்திரத்திடமிருந்து கிடைக்கும்போது பாராட்டும் மிகப்பெரியதாகவே இருக்கிறது. எங்கள் எதிர்பார்ப்பையும் மீறி “கிளாப்” படத்திற்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. தீவிர நோய்த்தொற்றால் உலகமே முடங்கிய நிலையில், இந்தப் படமும் பல பிரச்சனைகளைச் சந்தித்தது. அவையனைத்தையும் கடந்து, இப்போது படத்திற்குக் கிடைத்துவரும் மதிப்பும் பாராட்டும் மனதிற்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் களங்கள் விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் மட்டுமே. அந்த வகையில், “கிளாப்” திரைப்படம் பார்வையாளர்கள் மட்டுமல்லாமல், திரைப்பட பிரபலங்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி. அதிலும் இந்திய சினிமாவின் பேரரசர் அமிதாப்பச்சன் அவர்கள் பாராட்டியது படக்குழுவினருக்கு உட்சபட்ச மகிழ்ச்சியைத்தந்துள்ளது.

grgds

Advertisment

இயக்குனர் பிரித்வி ஆதித்யா தன்னுடைய மூலக்கதையை திரைவடிவில் மிகவும் அருமையாக படமாக்கியுள்ளார். “கிளாப்” திரைப்பட டீஸர் சிறந்த வரவேற்பைப் பெற்றது எனக்குத்தனிப்பட்ட வகையில் மிகுந்த மகிழ்ச்சியைத்தந்துள்ளது. குறிப்பாக தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வரவேற்பை பெற்றுள்ளது. ஆதியின் நடிப்புத்திறமைமென்மேலும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த படம் வெளியான பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அவர் நட்சத்திர அந்தஸ்து அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடும் என்பதை நான் நம்பிக்கையோடு கூறுகிறேன். இந்தப் படத்திற்கு மேலும் பன்மடங்கு பலம் சேர்க்கும் விதமாக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களின் இசை அமைந்துள்ளது. இப்படம் அனைவருக்கும் பிடித்த வகையில் எல்லோரையும் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும்" என்றார்.

bfdhfd

இயக்குநர் பிரித்வி ஆதித்யா எழுதி, இயக்கியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. நாயகனாக நடிகர் ஆதி, நாயகியாக ஆகான்ஷா சிங், மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் கிரிஷ் குருப், பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி, முனிஷ்காந்த் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

Actor aadhi clap
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe