Skip to main content

ட்ரெண்டிங்கில் நடிகர் ஆதியின் 'கிளாப்' பட டீசர்!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

hrehrd

 

பிக் ப்ரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐ.பி கார்த்திகேயன் தயாரிப்பில், ஆதி  முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “கிளாப்” படத்தின் டீசர் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆதி உடைய திறமையான நடிப்பும், பிரித்வி ஆதித்யா உடைய திறமையான எழுத்தினாலும் உருவான கிளாப் படத்தின் 70 நொடிகள் அடங்கிய டீசர் ரசிகர்களிடம் மிகுந்த பாராட்டைப் பெற்றிருக்கிறது. மேலும் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாரான அமிதாப்பச்சன் படத்தின் டீஸரை பாராட்டியுள்ளார். இதுகுறித்து பிக் ப்ரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐ.பி கார்த்திகேயன் பேசியபோது...

 

"நடிகர் அமிதாப்ஜிக்கு பெரும் நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவின் பெரிய நட்சத்திரத்திடமிருந்து கிடைக்கும்போது பாராட்டும் மிகப்பெரியதாகவே இருக்கிறது. எங்கள் எதிர்பார்ப்பையும் மீறி “கிளாப்” படத்திற்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. தீவிர நோய்த் தொற்றால் உலகமே முடங்கிய நிலையில், இந்தப் படமும் பல பிரச்சனைகளைச் சந்தித்தது. அவையனைத்தையும் கடந்து, இப்போது படத்திற்குக் கிடைத்துவரும் மதிப்பும் பாராட்டும் மனதிற்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.  மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் களங்கள் விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் மட்டுமே. அந்த வகையில், “கிளாப்” திரைப்படம் பார்வையாளர்கள் மட்டுமல்லாமல், திரைப்பட பிரபலங்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி. அதிலும் இந்திய சினிமாவின் பேரரசர் அமிதாப்பச்சன் அவர்கள் பாராட்டியது படக்குழுவினருக்கு உட்சபட்ச மகிழ்ச்சியைத் தந்துள்ளது. 

 

grgds

 

இயக்குனர் பிரித்வி ஆதித்யா தன்னுடைய மூலக்கதையை திரைவடிவில் மிகவும் அருமையாக படமாக்கியுள்ளார். “கிளாப்” திரைப்பட டீஸர் சிறந்த வரவேற்பைப் பெற்றது எனக்குத் தனிப்பட்ட வகையில் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. குறிப்பாக தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வரவேற்பை பெற்றுள்ளது. ஆதியின் நடிப்புத் திறமை மென்மேலும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த படம் வெளியான பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அவர் நட்சத்திர அந்தஸ்து அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடும் என்பதை நான் நம்பிக்கையோடு கூறுகிறேன். இந்தப் படத்திற்கு மேலும் பன்மடங்கு பலம் சேர்க்கும் விதமாக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களின் இசை அமைந்துள்ளது. இப்படம் அனைவருக்கும் பிடித்த வகையில் எல்லோரையும் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும்" என்றார்.

 

bfdhfd

 

இயக்குநர் பிரித்வி ஆதித்யா எழுதி, இயக்கியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. நாயகனாக நடிகர் ஆதி, நாயகியாக ஆகான்ஷா சிங், மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் கிரிஷ் குருப், பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி, முனிஷ்காந்த் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் டூ ஒலி - மீண்டும் வித்தியாசம் காட்டும் வெற்றிக் கூட்டணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Aadhi and Arivazhagan Sabdham movie teaser released

இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி இருவரும் ஈரம் பட வெற்றிக்கு பிறகு இணைந்துள்ள படம் சப்தம். 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி வெளியானது. 

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வசனங்கள் ஏதும் இடம் பெறாத இந்த டீசரில் திகில் படங்களுக்கு உண்டான அம்சங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து படத்தில் வித்தியாசம் காட்டியது போல் இப்படத்தில் ஒலியை வைத்து முயற்சி செய்துள்ளனர் படக்குழு. 

ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ஈரம் படம் இதே ஜானரில் வெளியாகி பலரது பாராட்டை பெற்றது. இதையடுத்து மீண்டும் ஒரு திகில் படத்திற்காக வித்தியாசமான கதைக்களத்தின் பிண்ணனியில் இணைந்துள்ள இக்கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த டீசர் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

உருவாகும் மரகத நாணயம் 2

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

Maragadha Naanayam 2

 

ஏஆர்கே சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் 'மரகத நாணயம்'. ஃபேண்டஸி காமெடி படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. டில்லிபாபு தயாரித்திருந்த இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற 'நீ கவிதைகளா...' பாடல் இளைஞர்கள் மத்தியில் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகப் படத்தின் இயக்குநர் சரவன் தெரிவித்துள்ளார். படத்தை, முதல் பாகத்தைத் தயாரித்த டில்லிபாபுவே அவரது ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். விரைவில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.