வித்தியாசம் காட்டி அசத்திய சேரன்; எளிய மக்கள் வெளியிட்ட தமிழ்க்குடிமகன் போஸ்டர் (படங்கள்)

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் சேரன்.இவரது மண்மணம் சார்ந்த படைப்புகள் இன்று பார்த்தாலும் கொண்டாடப்படும் படைப்புகளாகவே இருந்து வருகிறது.சிலகாலம், தானே இயக்கி நடித்தும் வந்தார். சில இயக்குநர்களின் படங்களில் கதையின் நாயகனாக நடித்தும் வந்தார்.திடீரென பிக்பாஸ் சின்னதிரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்க்குடிமகன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.இப்படத்தைஇசக்கி கார்வண்ணன் இயக்குகிறார்.இந்தப் படத்தின் போஸ்டரை வித்தியாசமான முறையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

நகரத்து வாழ் இளைஞர்கள்,நாட்டின் தூய்மை பணியில் தங்களை அர்ப்பணித்த உயர்ந்த மனிதர்கள்,கனவுகளைச் சுமந்து கொண்டு உழைக்கும் இளைஞர்கள்,திரைப்படக்கதாநாயகர்களைஉச்சிக்கு ஏற்றும் தூண்களான துணை நடிகர், நடிகைகள்,வளரும் நிலை நோக்கி வாழும் மக்கள் எனப் பல்வேறு தரப்பட்ட எளிய மக்களை வைத்து போஸ்டர் வெளியிட்டு கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

வித்தியாசமான முறையில் போஸ்டர் வெளியிட்டு இருக்கும் இப்படம்எளிய மக்களின் வாழ்வினை மையமிட்டு எடுக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க வைக்கிறது.

cheran Poster
இதையும் படியுங்கள்
Subscribe