Skip to main content

வித்தியாசம் காட்டி அசத்திய சேரன்; எளிய மக்கள் வெளியிட்ட தமிழ்க்குடிமகன் போஸ்டர் (படங்கள்)

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் சேரன். இவரது மண்மணம் சார்ந்த படைப்புகள் இன்று பார்த்தாலும் கொண்டாடப்படும் படைப்புகளாகவே இருந்து வருகிறது. சிலகாலம், தானே இயக்கி நடித்தும் வந்தார். சில இயக்குநர்களின் படங்களில் கதையின் நாயகனாக நடித்தும் வந்தார். திடீரென பிக்பாஸ் சின்னதிரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

 

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்க்குடிமகன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார். இந்தப் படத்தின் போஸ்டரை வித்தியாசமான முறையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

 

நகரத்து வாழ் இளைஞர்கள், நாட்டின் தூய்மை பணியில் தங்களை அர்ப்பணித்த உயர்ந்த மனிதர்கள், கனவுகளைச் சுமந்து கொண்டு உழைக்கும் இளைஞர்கள், திரைப்படக் கதாநாயகர்களை உச்சிக்கு ஏற்றும் தூண்களான துணை நடிகர், நடிகைகள், வளரும் நிலை நோக்கி வாழும் மக்கள் எனப் பல்வேறு தரப்பட்ட எளிய மக்களை வைத்து போஸ்டர் வெளியிட்டு கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

 

வித்தியாசமான முறையில் போஸ்டர் வெளியிட்டு இருக்கும் இப்படம் எளிய மக்களின் வாழ்வினை மையமிட்டு எடுக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க வைக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“இதற்கு பா.ஜ.க வெட்கப்பட வேண்டும்” - ஜெயக்குமார் ஆவேசம்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Jeyakumar raves on BJP should be ashamed of this

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வந்திருந்த பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது” என்று பேசினார். 

இதற்கிடையே, பா.ஜ.க லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுடன் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி அ.திமு.கவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பா.ஜ.கவினரின் செயலுக்கு புதுச்சேரி அ.தி.மு.க பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பா.ஜ.க பயன்படுத்த வெட்கப்பட வேண்டும். எதற்காக இப்படி எங்கள் தலைவர்கள் படங்களை பயன்படுத்துகிறீர்கள்?. அதிமுக தலைவர்களை முன்னிலைப்படுத்தி, பா.ஜ.க வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது. தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்று இதன்மூலம் தெரிகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களும் அதிமுகவுக்கு மட்டுமே சொந்தமானது” என்று கூறினார்.