cinematographer sukumar debut as actor

குட்டிப்புலி, கொம்பன், மருது என கிராமத்து பின்னணியில் படங்களை இயக்கி பிரபலமானவர் முத்தையா. அந்த வகையில் கடைசியாக ஆர்யாவை வைத்து 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Advertisment

இதையடுத்து முத்தையா இயக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படமும் அவரது ஸ்டைலில் கிராமத்து பின்னணியில் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக அவரது மகன் விஜய் முத்தையாவை அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தில் கதாநாயகியாக தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisment

இந்த படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்க, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தில் பரத் வில்லனாக நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒளிப்பதிவாளர் சுகுமார், கும்கி, காக்கிச் சட்டை, பைரவா உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் இப்படத்தில் நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் இப்படம் மூலம் நடிகராக அறிமுகமாவார்.

Advertisment