Advertisment

முடிவுக்கு வந்தது 50 நாள் வேலை நிறுத்தம்... சினிமா ஸ்ட்ரைக் வாபஸ் 

vishal

கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தொடர்ந்து 50 நாட்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர் . இதனால் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்ட்டன. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் புது பட வெளியீட்டை நிறுத்தி வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. இந்நிலையில் தமிழக அரசால் தான் இதை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று சினிமாத்துறையினர் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு சார்பில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக நடிகரும், தயரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் அறிவித்திருந்தார். இதையடுத்து நேற்று ஸ்ட்ரைக் வாபஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், FEFSI தலைவர் RK செல்வமணி , கௌரவ செயலாளர் SS துரைராஜ் , செயற்குழு உறுப்பினர்கள் RK . சுரேஷ் , உதயகுமார் , AL உதயா , பிரவீன்காந்த் , மிட்டாய் அன்பு மற்றும் SS குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பேசும்போது....." தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு க் கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமக்கபடும் இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அதன்மூலம் பட்டியலிட இருக்கிறோம். கடந்த 16 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படபிடிப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும். சம்பளம் தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் தெரிவிக்கப்படும். காலா படம் வெளியீடு தள்ளிப்போகிறது. தனுஷ் மற்றும் வுண்டர்பார் நிறுவனத்திருக்கு நன்றி. அவர்களின் ஓத்துழைப்பு மிகப்பெரியது. காலா ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வேறு ரிலீஸ் தேதியை காலா படக்குழுவினர் பின்னர் அறிவிப்பார்கள். தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுக்க டிக்கெட் விற்பனை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்" என்றார் விஷால். இதையடுத்து இந்த சினிமா ஸ்ட்ரைக் வாபஸ் ஆனது திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நடிகர் விஷாலுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisment
tamilcinemaupdate theaterstrike FEFSI vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe